×

வீட்டில் தனியாக தூங்கிய 75 வயது மூதாட்டி பலாத்காரம் செய்து அடித்து கொலை: போதை வாலிபர் கைது

சென்னை, மார்ச் 5: வீட்டில் தனியாக தூங்கிய 75 வயது மூதாட்டியை, கஞ்சா போதையில் பலாத்காரம் செய்து, அடித்து கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். ராயப்பட்டை ரோட்டரி நகர் 3வது தெருவை சேர்ந்தவர் ஆதிலட்சுமி (75). திருமணம் ஆகாத இவர், தனியாக வசித்து வந்தார். நேற்று காலை ஆதிலட்சுமி நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது, அவர் ரத்த வெள்ளத்தில் தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தது தெரியவந்தது. உடனே இதுபற்றி ராயப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, சிசிடிவி பதிவுகளை பெற்று விசாரணை நடத்தினர். அதில், திருவல்லிக்கேணி நொச்சி குப்பத்தை சேர்ந்த வசந்த்குமார் (21), மூதாட்டி வீட்டிற்கு வந்து சென்றது தெரியவந்தது. அவரை பிடித்து, விசாரணை நடத்தியபோது, கஞ்சா போதையில் மூதாட்டியை பலாத்காரம் செய்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

அவர் அளித்த வாக்குமூலமாக போலீசார் கூறியதாவது: நான், தினமும் நண்பர்களுடன் சேர்ந்து கஞ்சா அடிப்பது வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம் கஞ்சா போதையில் ராயப்பட்டை ரோட்டரி நகர் 3வது தெருவில் நடந்து சென்றேன். அப்போது, அங்குள்ள ஒரு வீடு  திறந்து இருந்தது. வீட்டில் நுழைந்து பார்த்தபோது, பெண் ஒருவர் தனியாக தூங்கிக் கொண்டிருந்தார். அவரை இளம்பெண் என்று நினைத்து வாயை பொத்தி பாலியல் பலாத்காரம் செய்தேன். அப்போது, அவர் கூச்சலிட்டதால் ஆத்திரமடைந்து, தலையை பிடித்து தரையில் பலமாக தாக்கினேன். இதில், ரத்த வெள்ளத்தில் அவர் இறந்தார். இதையடுத்து, கொள்ளையர்கள் நகையை பறித்துக்கொண்டு, மூதாட்டியை கொன் றபோல் மற்றவர்களை நம்ப வைப்பதற்கு, மூதாட்டி அணிந்து இந்த நகைகள் மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டு தப்பினேன்.  கஞ்சா போதையில் இளம்பெண் என்று நினைத்து தவறாக மூதாட்டியை பாலாத்காரம் செய்து கொலை செய்துவிட்டேன். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

Tags :
× RELATED வீட்டில் தனியாக தூங்கிய 75 வயது...