×

கலைஞர் அவர்கள் காட்டிய வழியில் அயராது உழைப்போம், மீண்டு எழுவோம் – உதயநிதி ஸ்டாலின்

சென்னை: இன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாள் கொண்டாடப்படுவதையொட்டி உதயநிதி ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே” என்ற ஒற்றைக்குரலில் கோடானு கோடி கழகத் தொண்டர்களை கட்டிப்போட்ட முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 103 ஆவது பிறந்தநாள் இன்று!

கலைஞர் அவர்கள் காட்டிய வழியில் அயராது உழைப்போம். மீண்டு எழுவோம் – மீண்டும் வெற்றிக் கொடி ஏற்றுவோம்! ஓங்குக கலைஞர் புகழ் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தந்தை பெரியாரின் வழியில் சுயமரியாதை போராளியாய், பேரறிஞர் அண்ணா வழியில் மொழியுரிமை, மாநில உரிமைகள் காத்த தமிழினத் தலைவராய் வாழ்ந்த முத்தமிழறிஞர் கலைஞர் புகழ் போற்றுவோம். முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாளில் கழகத்தலைவர் மு.க. ஸ்டாலின் வழியில் மக்கள் பணி, கழகப் பணி தொடர உறுதியேற்போம் என்று தெரிவித்துள்ளார்.

 

 

Tags : Assistant Secretary ,Stalin ,Chennai ,Udayanidhi Stalin ,Chief Minister ,Karunanidhi ,Godanu Kodi ,
× RELATED காவல்துறை மீது விஜய்க்கே நம்பிக்கை...