×

பெரம்பலூரில் பரபரப்பு மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் கண்ணியத்துடன் வாக்களிப்போம் என உறுதிமொழி அரியலூர் கலெக்டர் முன் கையெழுத்திட்டனர்

அரியலூர்,மார்ச் 5: மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் கண்ணியத்துடன் வாக்கப்போம் என உறுதிமொழி எடுத்து அரியலூர் கலெக்டர் முன் கையொழுத்திட்டனர்.இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவிற்கிணங்க 100 சதவீத வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இது தொடர்பாக மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் பங்கேற்ற இருசக்கர பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலருமான, கலெக்டருமான ரத்னா கொடியசைத்து துவக்கி வைத்தார்.கலெக்டர் அலுவலகத்தில் துவங்கிய இப்பேரணியில் பங்கேற்ற150ற்கும் மேப்பட்ட மாற்றுத்திறனாளி வாக்காளர்கள், வாக்களிப்பதன் அவசியம் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறு பேருந்து நிலையத்தை அடைந்தனர். முன்னதாக வாக்களிப்பதன் அவசியம் குறித்த கையெழுத்து இயக்கத்தை கலெக்டர் ரத்னா தொடங்கி வைத்தார். இதில் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் அனைவரும் கண்ணியத்துடன் வாக்களிப்போம் என்று கையெழுத்திட்டனர்.

புதிய தலைமுறை வாக்காளர்கள் அனைவரும் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் - 2021ன் போது, புதிதாக வாக்காளர் பட்டியலில் முதன் முறையாக பெயர் சேர்க்கப்பட்ட வாக்காளர்களில் தங்களது செல்லிட பேசி எண்ணை வழங்கிய வாக்காளர்கள் அனைவருக்கும் மின்னணு வாக்காளர் அடையாள அட்டையினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் 13.3.2021 (சனிக்கிழமை) மற்றும் 14.3.2021 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் சிறப்பு முகாம் நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம் ஆணையிட்டுள்ளது. இம்முகாமினை பயன்படுத்தி தங்களது மின்னனு வாக்காளர் அடையாள அட்டையினை தங்களது செல்லிடப்பேசி, கணினியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இது குறித்தும் இளந்தலைமுறை வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Tags : Perambalur ,Ariyalur Collector ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கலெக்டர்...