×

சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு சமூக ஆர்வலர்களுக்கு கொரோனா தடுப்பூசி

அரியலூர், மார்ச் 5: திருமானூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், கொரோனா தடுப்பூசி பற்றி மக்களிடையே உள்ள தவறான அச்ச உணர்வை போக்கி, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பினர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதில் வட்டார மருத்துவ அலுவலர் மேகநாதன் மேற்பார்வையில், சமூக ஆர்வலர்கள் பாளை.திருநாவுக்கரசு, தங்க.ஜெயபாலன், நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் வரதராஜன் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர். கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழ்களை மருத்துவர்கள் சமூக ஆர்வலர்களுக்கு வழங்கினர்.

Tags : Corona ,
× RELATED விதவிதமாக தரமான முறையில் தயாரிப்பு...