×

தேர்தல் பணிபுரியும் இடத்திலேயே வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்

அரியலூர், மார்ச் 5: தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர் பிகே இளமாறன் வெளி ட்டுள்ள அறிக்கை: ஆசிரியர்- அரசு ஊழியர்களின் வாக்குகள் நூறு சதவீதம் பதிவாகும் வகையில் பணிபுரியும் வாக்குச் சாவடியிலேயே வாக்களிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். பணிபுரியும் வாக்குச்சாவடிகள் கடந்த முறை 100 கி.மீட்டருக்கும் அதிக தொலைவில் அமைத்ததால் பெண் ஊழியர்கள் பெரிதும் சிரமப்பட்டனர். இதனால் வாக்குச்சாவடிகள் 10 கி.மீட்டருக்குள் பணியமர்த்திட வேண்டும்.

ஆசிரியர்- அரசு ஊழியர்கள் வாக்குப்பதிவு முன் நாள் மதியம் சென்று மறுநாள் இரவு வாக்கு எந்திரங்கள் அனுப்பி வைக்கும் வரை பணி மேற்கொள்வதால் தேர்தல் நாளன்றும் மற்றும் பயிற்சி வகுப்புகள் நடைபெறும் போதும் தேர்தல் ஆணையமே உணவு வழங்கிட வேண்டும்.கொரோனா பெருந்தொற்றால் தனிமைப்படுத்த பட்டவர்களுக்கு தபால் வாக்கு வழங்க வேண்டும். வாக்குச் சாவடிகள் முழுவதும் கிருமிநாசினி தெளிக்க வேண்டும். வாக்காளர்களுக்கு சானிடைசர் வழங்கி பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும்.தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்-அரசு ஊழியர்கள் தேர்தல் பணி முடிந்ததும் இரண்டு நாட்கள் தனிமைப் டுத்திக் கொள்ள விடுப்பு வழங்க நடவடி க்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வலியுறு த்துகிறோம் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
× RELATED திருவாரூர் பைபாஸ் சாலை அருகே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேதமடைந்த நூலக சாலை