×

பொதுமக்கள் வலியுறுத்தல் அரியலூர் சட்டமன்ற தொகுதிக்கான மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைப்பு கலெக்டர் ஆய்வு

அரியலூர்,மார்ச் 5: அரியலூர் சட்டமன்ற தொகுதிக்கான மாதிரி வாக்குச்சாவடி மையம் அரியலூர் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்தது. இம்மாதிரி வாக்குச்சாவடி மையத்தை மாவட்ட தேர்தல் அலுவரும், கலெக்டருமான ரத்னா ஆய்வு செய்தார்.அப்போது அவர் கூறியதாவது:இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி தேர்தல் நடமுறைகள் குறித்து வாக்காளர்களிடையே பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில், வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நிகழ்வுகள் குறித்து வாக்காளர்கள் அறிந்து கொள்ளும் வகையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு கருவி மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்யும் கருவி உள்ளிட்டவைகளின் செயல்பாடுகள் குறித்து வாக்காளர்கள் அறிந்து கொள்ளும் வகையில் கிராமங்கள் தோறும் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும் வாக்கச்சாவடி மையம் குறித்த விழிப்புணர்வை வாக்காளர்களிடம் ஏற்படுத்தும் வகையில் அரியலூர் பேருந்து நிலையத்தில் மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் வாக்குச்சாவடி மையம் இருப்பது போல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு கருவி மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்யும் கருவி உள்ளிட்டவைகள் அடங்கிய வாக்களிக்கும் பகுதி, வாக்குச்சாவடி தலைமை அலுவலர், வாக்குச்சாவடி அலுவலர் நிலை 1, வாக்குச்சாவடி அலுவலர் நிலை 2, வாக்குச்சாவடி அலுவலர் நிலை 3, ஆகியோர்களின் இருப்பிடம், அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் அமருமிடம் உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டு வாக்காளர்களுக்கு மாதிரி வாக்களிக்கும் நிகழ்ச்சி மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்ட்டது. எனவே, வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்கும் முறைகள் குறித்து முழுமையாக தெரிந்து கொண்டு, தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன், வருவாய் கோட்டாட்சியர் ஏழுமலை, தாசில்தார் ராஜமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Ariyalur ,Assembly Constituency ,
× RELATED அரியலூர் அருகே பெரிய ஏரியில் குளிக்க...