×

தா.பழூர் வட்டார வள மையத்தில் புதிய பாட நூல்கள் அறிமுக பயிற்சி

தா.பழூர், ஜூன் 3: தா.பழூர் அருகே புதிய பாட நூல்கள் அறிமுக பயிற்சி நடந்தது. அரியலூர் மாவட்டம் தா.பழூர் வட்டார வள மையத்தில் புதிய பாட திட்டத்திற்கான 1,2,3, வகுப்புகளுக்கான அறிமுக பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியினை தா.பழூர் வட்டார கல்வி அலுவலர் சந்திரலேகா தலைமையேற்று நடத்தினார்.

இதில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் சுதா முன்னிலை வகித்தார். தா.பழூர் ஒன்றியத்தில் 123 வகுப்புகளை சார்ந்த 85 பள்ளிக்கு உட்பட 120 ஆசிரியர்கள் இந்த பயிற்சியில் கலந்து கொண்டனர். இந்த பயிற்சியில் புதிய பாடத்திட்டம் வடிவமைப்பு, ஆசிரியர் கையேடு வடிவமைப்பு, மதீப்பீட்டு முறையில் மாற்றம், உள்ளிட்ட முக்கிய கருத்துக்கள் குறித்து கலந்துரையாடல் செய்யப்பட்டது.

பயிற்சியினை வட்டார பயிற்சி ஒருங்கிணைப்பாளர் அந்தோனி தாஸ் பயிற்சியை ஒருங்கிணைத்து செய்திருந்தார். மேலும் பயிற்சியின் கருத்தாளர்களாக ஆசிரியர் பயிற்றுனர் இளவழகன், மோகன், சம்பத், சிவா, ஆகியோர் செயல்பட்டனர். இதில் தா.பழூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 120 ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

 

Tags : Tha.Pazhur Regional Resource Center ,Tha.Pazhur ,Tha.Pazhur. ,Ariyalur ,Tha.Pazhur Regional Education… ,
× RELATED தன்னார்வ குருதி கொடையாளருக்கு பாராட்டு