×

103வது பிறந்த நாளை முன்னிட்டு கலைஞர் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் இன்று மரியாதை: தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகளுக்கு ஏற்பாடு

சென்னை: கலைஞரின் 103வது பிறந்தநாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் இன்று காலை மலர் மாலை வைத்து மரியாதை செலுத்துகிறார். தமிழகம் முழுவதும் திமுக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மறைந்த முதல்வரும், திமுக தலைவருமான கலைஞரின் 103வது பிறந்த நாள் விழா இன்று (புதன்கிழமை) தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

கலைஞரின் 101வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று காலை 8 மணியளவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து காலை 8.15 மணிக்கு மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா சாலை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கலைஞர் சிலைக்கு மலர் மாலை வைத்து மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து காலை 8.30 மணியளவில் மு.க.ஸ்டாலின் கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி வளாகத்தில் உள்ள கலைஞர் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

மேலும் காலை 8.45 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைந்துள்ள கலைஞரின் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அதன் பின்னர் காலை 9.30 மணியளவில் தேனாம்பேட்டை அன்பகத்தில் 75 அடி உயர கம்பத்தில் திமுக கொடியை ஏற்றுகிறார். மேலும் அங்கு பெரியார், அண்ணா, கலைஞர் சிலைகளை அவர் திறந்து வைக்கிறார்.

கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு இன்று திமுக கிளை கழகங்கள் தொடங்கி, அனைத்து அமைப்புகளின் சார்பிலும் கலைஞரின் படத்தினை வைத்து, கட்சி தோழர்கள் அனைவரும் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்திட மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளைக் கழகச் செயலாளர்கள் உரிய ஏற்பாடுகளை செய்துள்ளனர். மேலும் தமிழகம் முழுவதும் திமுக சார்பில் பொதுக்கூட்டங்கள், நலத்திட்ட உதவிகள், மருத்துவ முகாம்கள், விளையாட்டு போட்டிகள் என தொடர் நிகழ்ச்சிகள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags : K. ,Stalin ,Dimuka ,Tamil Nadu ,Chennai ,K. Stalin ,
× RELATED திருச்சி அருகே கார் மீது லாரி மோதல்...