அரசு மருத்துவர் தகவல் கள்ள தொடர்பை கண்டித்த வக்கீலை கத்தியால் குத்தியவரை கைது செய்யக் கோரி முற்றுகை

திருவாரூர், மார்ச் 5:திருவாரூர் அருகே இலவங்கார்குடி கிராமத்தில் வசித்து வருபவர் வழக்கறிஞர் சுகுமார் (30). இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் நித்யா (26). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவர் ஜான்பீட்டர் விவாகரத்தாகி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திருவாரூர் மில் தெரு அருகே ஆறுமுக நாடார் தோட்டம் பகுதியை சேர்ந்த ஐயப்பன் (24) என்பவருக்கும், நித்யாவிற்கும் கள்ளத் தொடர்பு இருந்து வந்த நிலையில், வழக்கறிஞர் சுகுமார் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் இதனை கண்டித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் நித்தியா வீட்டிற்கு வந்த ஐயப்பனை சுகுமார் மற்றும் சிலர் சேர்ந்து கண்டித்தபோது, ஆத்திரமடைந்த ஐயப்பன் தன்னிடமிருந்த கத்தியால் சுகுமாரை குத்தி விட்டு ஓடிவிட்டார். கழுத்து, விலா பகுதி உட்பட பல்வேறு இடங்களில் காயமடைந்த சுகுமார் திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் வழக்கறிஞர் சுகுமாரை கத்தியால் குத்திய ஐயப்பனை உடனே கைது செய்யக்கோரி இலவங்கார்குடி கிராம மக்கள் நேற்று காலை எஸ்பி அலுவலகம் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து தாலுகா போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி குற்றவாளிகளை உடனே கைது செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

Related Stories:

>