பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாத சாலையால் ராயனூர் பகுதி மக்கள் அவதி

கரூர், மார்ச் 5: கரூர் நகராட்சிக்குட்பட்ட எம்ஜிஆர் நகர்ச்சாலை பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாததால் இந்த பகுதியினர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.கரூர் ராயனூரில் இருந்து தாந்தோணிமலை, மில்கேட் போன்ற பகுதிகளுக்கு செல்லும் அனைத்து தரப்பினர்களும் எம்ஜிஆர் நகர் வழியாக சென்று வருகின்றனர்.இந்நிலையில், கடந்த பல ஆண்டுகளாக இந்த சாலை தரம் உயர்த்தப்படாமல் கண்டும் காணாமல் விடப்பட்டுள்ளதால் வாகன ஒட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த பகுதியை சுற்றிலும் உள்ள மற்ற சாலைகள் சீரமைக்கப்பட்ட நிலையில், குடியிருப்புகள் அதிகம் உள்ள இந்த சாலை சீரமைக்கப்படவில்லை. தற்போது தேர்தல் சமயம் என்பதால் சாலை பணிகள் நடைபெறவில்லை என்ற நிலையில், சாலையின் மோசமான தன்மை காரணமாக பெரும்பாலானவர்கள் ராயனூர் நான்கு ரோடு வழியாக சென்று வருகின்றனர்.

Related Stories:

>