ராயனூர் அகதிகள் முகாம் அருகே சாக்கடை வடிகால் உடைப்பால் சாலையில் வெளியேறும் கழிவுநீர்

கரூர், மார்ச் 5: கரூர் ராயனூர் இலங்கை தமிழர் முகாம் பின்புறம் சாக்கடை வடிகாலில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறி வருவது குறித்து கண்காணித்து சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கரூர் ராயனூரில் இலங்கை தமிழர் முகாம் உள்ளது. ஆயிரக்கணக்கானோர் இங்கு வசித்து வருகின்றனர். இந்த பகுதியை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இதில், வெங்கடேஷ்வரா நகர் பகுதியின் வழியாக செல்லும் சுற்றுச்சுவரோரம் உள்ள சாக்கடை வடிகாலில் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் சாலையில் கலந்து வருகிறது.

இதன் காரணமாக துர்நாற்றம் மற்றும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனை பராமரித்து புதிதாக அமைத்து தர வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

எனவே, சுகாதார சீர்கேடு ஏற்படும் வகையில் உடைப்பு ஏற்பட்டுள்ள இந்த சாக்கடை வடிகாலை தரம் உயர்த்த தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>