கரூர் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான புகார்கள் தெரிவிக்க தொலைபேசி எண் பாசன வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகளால் தண்ணீர் செல்வதில் தடை

கரூர், மார்ச். 5: கரூர் ராயனூர் பாசன வாய்க்காலில் தேங்கிக் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளால் தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளதால் கழிவுகளை அகற்றி தூர்வார வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரூர் செல்லாண்டிபாளையம் பகுதியில் இருந்து ராயனூர் வழியாக பாசன வாய்க்கால் மில்கேட் பகுதி வரை செல்கிறது. இதில், செல்லாண்டிபாளையம் ராயனூர் இடையே செல்லும் வாய்க்கால் நாளுக்கு நாள் குறுகிய நிலைக்கு செல்வதோடு, தினமும் இந்த வாய்க்காலில் அதிகளவு பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அதிகளவில் பிளாஸ்டிக் கழிவுகளும் குப்பைகளும் தேங்கி கிடப்பதால் தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில் பாசன வாய்க்காலாக இருந்த இந்த வாய்க்காலின் நிலையும், நிறமும் மாறி வருகிறது. எனவே, இந்த வாய்க்காலை பார்வையிட்டு சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த வாய்க்காலை சீரமைத்து, பிளாஸ்டிக் கழிவுகள் சேராத வகையில் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories:

>