தேர்தல் நடத்தை விதிமீறல் பள்ளி வளாகத்தில் 3 வாகனங்களில் திடீர் தீ

கரூர், மார்ச் 5: கரூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்க கட்டணமில்லா தொலை பேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்று கரூர் மாவட்ட கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் 2021க்கான தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கடந்தமாதம் 26ம் தேதி அறிவித்துள்ளது. அதன்படி சட்டமன்ற பொதுத்தேர்தல் வருகிற ஏப்ரல் 6ம்தேதி நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அன்று முதல் தேர்தல் நடத்தை விதிகளும் மல்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவபடையினர் மற்றும் போலீசார் நியமிக்கப்பட்டு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் தங்கள் பகுதியில் தேர்தல் விதிகளை மீறி பணப்பட்டுவாடா நடைபெற்றால் புகார் தெரிவிப்பதற்காக கட்டுப்பாட்டு அறைகள் செயல்படுகிறது.இந்நிலையில் கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்கள் ஏதேனும் தெரிவிக்க விரும்பினால் 1950 மற்றும் 1800 425 5451 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தெரிவிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் மலர்விழி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>