ராஜபாளையத்தில் வைக்கோல் படப்பில் தீ

ராஜபாளையம், மார்ச் 5: ராஜபாளையம் கல்யாணசுந்தரனார் தெரு பகுதியில் கால்நடைத் தீவனத்திற்கு சேமித்து வைக்கப்பட்ட வைக்கோல் படப்பில் திடீர் என தீவிபத்து ஏற்பட்டது. சுமார் ஒருமணி நேரத்திற்கு மேலாக போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.ராஜபாளையம் ஆவரம்பட்டி கல்யாணசுந்தரனார் தெருவை சேர்ந்தவர் ரெங்கசாமி. இவர் கால்நடைக்கு தீவனத்திற்காக வைக்கோல் சேமித்து வைத்துள்ளார். நேற்று திடீரென வைக்கோல் படப்பில் தீப்பற்றியுள்ளது. இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அத்துடன் தண்ணீர் கொண்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த ராஜபாளையம் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்ததில், குறுகலான தெருவிற்குள் வைக்கோல் சேமித்து வைக்கப்பட்டிருந்ததால் வாகனம் செல்ல முடியாமல் தவித்தனர். இதனால் குடியிருப்பு பகுதியில் கிடைக்கும் நீரினை கொண்டு சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் சுமார் ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான வைக்கோல் எரிந்து சாம்பலானது. மேலும் இது குறித்து வடக்கு காவல் நிலைய போலீசார் எதிர்பாராமல் தீ விபத்து நிகழ்ந்ததா? மர்ம நபர்கள் தீ வைத்தனரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>