செங்கம், ஜூன் 2: செங்கம் அருகே பைக் மீது கார் மோதியதில் கணவன் பலியானார், மனைவி படுகாயமடைந்தார். திருவண்ணாமலை நோக்கி சென்றபோது இந்த விபத்து நடந்துள்ளது. பெங்களூரை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் தனது மனைவி நளினியிடன் நேற்றுமுன்தினம் நள்ளிரவு திருவண்ணாமலை நோக்கி பைக்கில் சென்றார். செங்கம் நகராட்சிக்கு உட்பட்ட திருவள்ளுவர் நகரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது அடையாளம் தெரியாத கார் இவர்களது பைக் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட இருவரும் படுகாயமடைந்து மயங்கி கிடந்தனர். அப்போது அவ்வழியாக வந்த லாரி ேமாதியதில் சீனிவாசன் தலை நசுங்கி பலியானார். இதேபோல் மேலும் சில வாகனங்களில் சடலத்தின் மீது மோதியது.
இதுகுறித்து தகவலறிந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விரைந்து வந்து படுகாயமடைந்த நளினியை மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த செங்கம் போலீசார் சீனிவாசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
