×

தொழிலாளியுடன் தகாத உறவை கைவிட மறுப்பு; தலையில் கல்லைப் போட்டு கள்ளக்காதலி கொடூர கொலை: பழநியில் கள்ளக்காதலன் கைது

 

பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநி புறநகர், சிவகிரிபட்டி ஊராட்சி, பாண்டியன் நகரை சேர்ந்தவர் காளீஸ்வரி (34). நேற்று அதிகாலை அப்பகுதி திறந்தவெளி முட்புதரில் தலையில் கல்லை போட்ட நிலையில் கொலையாகி கிடந்தார். தகவலறிந்து பழநி டவுன் போலீசார், காளீஸ்வரிஉடலை கைப்பற்றி விசாரித்தனர். இதில் கொலையில் ஈடுபட்டது காளீஸ்வரியின் கள்ளக்காதலன் மகுடேஸ்வரன் (40) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: காளீஸ்வரிக்கு ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தயத்தை சேர்ந்த கருப்புச்சாமியுடன் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

அவர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டதால் காளீஸ்வரி, பிரிந்தார். அப்போது பழநி, பாலசமுத்திரத்தை சேர்ந்த கொத்தனார் மகுடேஸ்வரனுடன் (40) காளீஸ்வரிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் பழநி டவுன், கவுண்டன்குளத்தில் வீடு எடுத்து வாழ்ந்து வந்தனர். சில மாதங்களுக்கு முன்பு கூலித்தொழிலாளியான எவிசன் நகரை சேர்ந்த குருவுடன் காளீஸ்வரிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மகுடேஸ்வரனை பிரிந்து காளீஸ்வரி பாண்டியன் நகரில் தனியாக வசித்து வந்தார். அந்த வீட்டிற்கு குரு அடிக்கடி சென்று உல்லாசமாக இருந்துள்ளார். மகுடேஸ்வரனும் அவ்வப்போது சென்று வந்துள்ளார். இதனால் வீட்டின் உரிமையாளர், காளீஸ்வரியை கண்டித்துள்ளார்.

இதனால் மகுடேஸ்வரனை வீட்டிற்குள் வர விடாமல் வெளியிலேயே சந்தித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வீட்டிலிருந்த காளீஸ்வரியை மகுடேஸ்வரன் அருகில் உள்ள புதர் பகுதிக்கு அழைத்து சென்று மது அருந்தி உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது. அப்போது மகுடேஸ்வரன், குருவுடனான தொடர்பை கைவிட்டு தன்னுடன் வந்து விடுமாறு காளீஸ்வரியை அழைத்துள்ளார். ஆனால் காளீஸ்வரி வர மறுத்துள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் மகுடேஸ்வரன் அங்கிருந்த கல்லை காளீஸ்வரி தலையில் போட்டு கொலை செய்துள்ளார். இதுதொடர்பாக மகுடேஸ்வரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு கூறினர்.

Tags : Palani ,Kaleeswari ,Pandian Nagar, Sivagiripatti Panchayat, Palani Suburban, Dindigul District ,Town ,
× RELATED பைனான்சியர் கத்தியால் குத்தி எரித்து...