வில்வித்தை போட்டியில் மாநில அளவில் சாதனை குடியாத்தம் அரசு பள்ளி மாணவன்

குடியாத்தம், மார்ச் 5: குடியாத்தம் அரசு பள்ளி மாணவன் வில்வித்தை போட்டியில் மாநில அளவில் சாதனை படைத்துள்ளார். தமிழ்நாடு வில்வித்தை சங்கம் சார்பில் சென்னை அடையாறு டாக்டர் எம்ஜிஆர் ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 13வது மாநில அளவிலான வில்வித்தைப் போட்டி கடந்த மாதம் 21ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடைபெற்றது. இதில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.

அதில் குடியாத்தம் நெல்லூர்பேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவன் ஆர்.ரோஷன்குமார் பங்கேற்று தங்கம் பதக்கம் வென்றார். இவருக்கு பள்ளி தலைமையாசிரியர் திருநாவுகரசு, உடற்கல்வி இயக்குனர் புனிதவதி, பேச்சாளர்கள் பேரவை தலைவர் எஸ்.சுகன்யாசதீஷ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories: