சானிடைசர், தெர்மல் ஸ்கேன் செய்ய 1,162 பேர் பட்டியல் தயார் வேலூர் மாநகராட்சியில் 581 வாக்குச்சாவடிகளில்

வேலூர், மார்ச் 5: சானிடைசர், தெர்மல் ஸ்கேன் செய்ய வேலூர் மாநகராட்சியில் 581 வாக்குச்சாவடிகளுக்கு 1,162 பேர் பட்டியல் தயார் செய்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி தேர்தல் விதிமுறைகள் கடந்த 26ம் தேதி மாலை அமலுக்கு வந்தது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

அதேசமயம் தேர்தலுக்கான பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ள சானிடைசர், ெதர்மல் ஸ்கேனர் செய்ய பணியாளர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் வேலூர் மாநகராட்சியில் உள்ள 581 வாக்குச்சாவடிகளில் ஒரு வாக்குச்சவாடிக்கு வாக்காளர்களுக்கு சானிடைசர் வழங்க ஒருவர், தெர்மல் ஸ்கேன் செய்ய ஒருவர் என்று தலா 2 பேர் வீதம் மொத்தம், 1,162 பேர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: