உலக நன்மை வேண்டி சிறப்பு யாகம் இஞ்சிமேடு வரதராஜ பெருமாள் கோயிலில்

பெரணமல்லூர், மார்ச் 5: இஞ்சிமேடு வரதராஜ பெருமாள் கோயிலில் உலக நன்மை வேண்டி சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. பெரணமல்லூர் அடுத்த இஞ்சிமேடு கிராமத்தில் வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நேற்று முன்தினம் சுவாதி நட்சத்திரம் முன்னிட்டு அதிகாலையில் மூலவர் வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடந்தது.

தொடர்ந்து, உலக நன்மைக்காகவும், கடன் தொல்லை நீங்கவும் வேண்டி கோயில் வளாகத்தில் நவதானியங்கள், பட்டு வஸ்திரம் கொண்டு சிறப்பு யாக வேள்வி பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

Related Stories:

>