மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுபாட்டு அறை திறப்பு

திருப்பூர்,மார்ச்.4:திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுபாட்டு அறையினை மாவட்ட கலெக்டர் நேற்று திறந்து வைத்தார்.திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயன் தேர்தல் கட்டுபாட்டு அறையை திறந்து வைத்து பேசியதாவது: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடத்தப்படுகிறது. தேர்தல் மாதிரி நடத்தை விதிகள் மாவட்டம் முழுவதும் நடைமுறை படுத்தபட்டுள்ளது. பொதுமக்கள் தேர்தல் குறித்த புகார்களை தெரிவிக்க 1800 425 6989 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.பொதுமக்கள் தேர்தல் குறித்த புகார்கள், கோரிக்கைகள் மற்றும் கருத்துக்கள் ஆகியவற்றை தெரிவிக்கலாம். பொதுமக்களால் தெரிவிக்கப்படும் புகார்கள் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு சம்மந்தப்பட்ட பறக்கும் படை அலுவலர்கள் மற்றும் நிலையான கண்காணிப்பு குழு அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டு, நேரடி விசாரணை என்ற அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 8 சட்டமன்ற தொகுதிகளிலும், தொகுதிக்கு மூன்று வீதம் மொத்தம் 24 பறக்கும் படைகளும், 24 நிலை கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டும் தொடர்ந்து கண்காணிப்பட்டு வருகிறது.மேலும் திருப்பூரில் தேர்தல் தொடர்பு மையத்தில் செயல்பட்டு வரும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1950யும் வாக்காளர்கள் பயன்படுத்தி, தேர்தல் தொடர்பாக தங்களுக்கு எழும் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் பேசினார். அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: