×

மூலப்பொருட்கள் விலை உயர்வு எலாஸ்டிக் விலை 30 சதவீதம் உயர்வு சங்க கூட்டத்தில் தீர்மானம்

திருப்பூர், மார்ச் 4:திருப்பூர் எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்க கூட்டம் நேற்று மாலை சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. தலைவர் கோவிந்தசாமி தலைமை வகித்து பேசினார். செயலாளர் சவுந்தரராஜன், பொருளாளர் சந்திரமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் ரப்பர் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு, இறக்குமதி செய்வதில் சிக்கல் உள்ளிட்ட காரணங்களால் கடந்த 2 மாதங்களில் பாலியஸ்டர் நூல் 50 சதவீதமும் ரூ.185-ல் இருந்து ரூ.270, லைக்ரா 60 சதவீதமும் (ரூ.420-ல் இருந்து ரூ.670- உயர்ந்துள்ளது. இதுபோல் மூலப்பொருட்களை முன்பணம் மற்றும் ரொக்கமாகவே கொள்முதல் செய்ய வேண்டியுள்ளது. இதனால் பின்னலாடை உற்பத்தியாளர்கள் கடனை குறைத்துகொள்ள வேண்டும். நிலுவைத்தொகையை விரைவாக வழங்க வேண்டும். மூலப்பொருட்களின் விலை உயர்வினால் விலை உயர்வு கட்டாயமாகிறது. அதன்படி நாளை (5ம் தேதி) முதல் எலாஸ்டிக்கின் விலை நடப்பு விலையில் இருந்து 30 சதவீதம் உயர்த்தப்படுகிறது. இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வருகிறது. இந்த விலை உயர்வுக்கு பின்னலாடை உற்பத்தி சங்கங்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags :
× RELATED பல்லடத்தில் கோடை வெயிலால் காய்ந்த...