5 கடைகளில் தொடர் திருட்டு சிசிடிவியில் பதிவான காட்சிகளை கொண்டு போலீஸ் விசாரணை

திருப்பூர், மார்ச் 4: திருப்பூர் நெருப்பெரிச்சல் அருகே உள்ள 5 கடைகளில் கடந்த 26-ம் தேதி இரவு மர்ம ஆசாமி ஒருவர் மேற்கூரையை பிரித்து உள்ளே சென்று  பணம், பொருட்கள் மற்றும் செல்போன்களை திருடி சென்றான். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த அனுப்பர்பாளையம் மற்றும் திருமுருகன்பூண்டி போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருந்த காட்சிகளை பார்வையிட்டனர். அதில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க மர்ம ஆசாமி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும் அவருடைய புகைப்படத்தை வைத்து பார்த்தபோது அவர் வடமாநில வாலிபராக இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த தொடர் திருட்டு சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள தனிப்படை போலீசார் குற்றவாளியை நெருங்கி விட்டதாக தெரிவித்தனர்.

Related Stories:

>