×

கோவில் வழியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

திருப்பூர்,மார்ச்4:திருப்பூரில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நேற்று கோவில் வழி பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட கோவில் வழி பகுதியில் புது பிள்ளையார் நகர் உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அந்த அங்கீகரிக்கப்பட்ட குடியிருப்பு பகுதியில் பொதுமக்களில் தேவைக்காக ஒரு பகுதி காலியிடமாக விடப்பட்டிருந்தது. அப்பகுதியில் சிறுவர்கள் பூங்கா அல்லது வழிபாட்டுத்தலம் அமைக்க அப்பகுதி பொதுமக்கள் திட்டமிட்டிருந்தனர்.  இந்நிலையில் அந்த இடத்தில் மாநகராட்சி அதிகாரிகள் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்க திட்டமிட்டு கடந்த ஆண்டு அஸ்திவாரம் தோண்டும் பணிகளை தொடங்கினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் அந்த இடத்தில் நீர் தேக்க தொட்டி கட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருவதால் அப்பகுதியில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து ஊரக போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்தனர். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது: அருகாமை பகுதியில் அமைய வேண்டிய நீர் தேக்க தொட்டியை இந்த பகுதியில் அமைக்க அதிகாரிகள் அமைக்க திட்டமிட்டுள்ளனர். இங்கு ஏற்கனவே இரண்டு மேல்நிலை தொட்டிகள் உள்ளது. அதில் ஒரு நீர் தேக்க தொட்டி மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. அதனால் இந்த இடத்தில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்காமல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான வேறு திட்டங்களை செயல்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும். இவ்வாறு கூறினர்.

Tags :
× RELATED அமைச்சர் முன்னிலையில் பாஜவினர் 100 பேர்...