அவிநாசியில் வெறி நாய் கடித்து 40 பேர் காயம்

அவிநாசி,மார்ச்40:அவிநாசி பேரூராட்சிக்குட்பட்ட ராயம்பாளையம், கைகாட்டி புதூர், சந்தப்பேட்டை வளாகம், குமரன் காலனி உள்ளிட்ட பகுதிகளில் மூவாயிரத்துக்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

 இந்நிலையில் நேற்று இப்பகுதியில் புகுந்த வெறிநாய் ஒன்று, பள்ளி மாணவி, இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் என சாலையில் நடந்து சென்ற பலரையும் விடாமல் விரட்டி,விரட்டி கடித்தது. ஒரு மணி நேரத்திற்குள் அந்த நாய் 40க்கும் மேற்பட்டோரை கடித்தது. இதில் காயம் அடைந்தவர்கள் அவிநாசி அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த அவிநாசி பேரூராட்சி தூய்மைப்  பணியாளர்கள், வெறி நாயை துரத்திப் பிடித்து அடித்துக் கொன்றனர்.

Related Stories:

>