ஜூன் 4 பள்ளிகள் திறப்பு அரசுப்பள்ளி காலிப்பணியிடங்களில் ரூ.18 ஆயிரத்திற்கு தற்காலிக ஆசிரியர்கள்

சென்னை: ஜுன் 4ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதனால் ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று பல்வேறு சங்கங்கள் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகின்றன. ஆனால் தற்காலிக ஆசிரியர்களை நியமித்து விடுகின்றனர். இதன்மூலம் குறைந்த சம்பளத்தில் வேலை செய்ய வேண்டிய சூழல் காணப்படுகிறது.

அதன்பிறகு பணி நிரந்தரம் செய்ய குரல் கொடுக்கின்றனர். இந்நிலையில் 2026-27ம் கல்வியாண்டில் தற்காலிக ஆசிரியர்களை நோக்கி பள்ளிக் கல்வித்துறை நகர்ந்து வருகிறது. தமிழகத்தில் வருகிற 4ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. இந்த சூழலில் பல்வேறு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தலைமை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அதிகாரி ஆகியோர் முக்கியமான அறிவுறுத்தலை வழங்கியுள்ளனர்.

அதன்படி, பள்ளிகள் திறக்கப்படும் போது ஆசிரியர்கள் முழுமையாக இருக்க வேண்டும். காலி பணியிடங்கள் இல்லாதவாறு பார்த்து கொள்ள வேண்டும். ஒருவேளை காலியிடங்கள் இருந்தால் தற்காலிக ஆசிரியர்கள் மூலம் நிரப்புவது அவசியம் என கூறப்பட்டுள்ளது. இந்த நடைமுறையை வழக்கமாக ஒரு மாதத்திற்கு முன்பே செய்திருக்க வேண்டும். நடப்பாண்டு தாமதமாக அறிவுறுத்தல்கள் வந்திருப்பதாக சேலத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

எஸ்எம்சி எனப்படும் பள்ளி மேலாண்மை குழுக்கள் மூலம் தற்காலிக ஆசிரியர்களை தேடி பிடிப்பது மிகவும் சிரமமாக உள்ளது. முதலில் சரியான நபர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு சம்பளம் பேச வேண்டும். அதற்கு அவர்கள் ஒத்துவர வேண்டும். பின்னர் வேலையில் சேரும் நாள் குறித்த விவரங்களை பகிர வேண்டும். இதில் சம்பள விஷயம் தான் சிக்கலாகி முன்வந்து நிற்கிறது. எவ்வளவு படித்திருந்தாலும், 1 முதல் 12ம் வகுப்பு வரை எந்த வகுப்பிற்கு ஆசிரியராக சென்றாலும் அதிகபட்சமாக ரூ. 18 ஆயிரம் தாண்டுவதில்லை.

இது தற்கால சூழலில் தனி நபருக்கோ, குடும்பத்தை நடத்துவதற்கோ போதுமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. ஒருவேளை கடந்த ஆண்டு தற்காலிக ஆசிரியரை பணியில் சேர்த்திருந்தால், அவரே மீண்டும் தொடரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எப்படி பார்த்தாலும் சம்பள சிக்கல் தான் பெரிதாக பார்க்கப்படுகிறது. ஜூன் 1ம் தேதி தற்காலிக ஆசிரியர் பணியில் சேர்வதாக வைத்துக் கொள்வோம். திடீரென பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவிப்பு வரும்.

அதில்0ம் தேதி முதல் மட்டுமே சம்பளம் போடப்படும் என்று வழிகாட்டுதல்கள் இடம்பெறும். இதனால் 9 நாட்கள் சம்பளம் கிடைக்காது. சில மாதங்களுக்கு சரியான தேதிக்கு சம்பளம் வந்து சேராது. வரும் வரை காத்திருக்க வேண்டும். இது குடும்ப செலவுகளை சிக்கலை தள்ளி விடும். அப்பஅரசு பள்ளி நிரந்தர ஆசிரியர்களுக்கு நிகராக வேலை செய்யும் தற்காலிக ஆசிரியர்களுக்கு மட்டும் சம்பளத்தில் ஏன் கிடுக்குப்பிடி என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது.

Related Stories: