பணப்பட்டுவாடாவை தடுக்க நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனை

திருப்பூர்,மார்ச்.4:சட்டமன்ற தேர்தலையொட்டி திருப்பூரில் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. அந்த தேர்தலையொட்டி தேர்தல் ஆணையம் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் குழு அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நிலை கண்காணிப்பு குழு அதிகாரி பழனிசாமி தலைமையிலான குழுவினர் நேற்று திருப்பூர் ஊத்துக்குளி ரோடு மண்ணரை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அந்த குழு சந்தேகத்திற்கிடமாக வரும் நான்கு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்களை மறித்து சோதனை செய்தனர். மேலும், திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் நிலை கண்காணிப்பு குழுவினர் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories:

>