உடுமலை அருகே தென்னை நார் தொழிற்சாலையில் தீ விபத்து

உடுமலை,மார்ச்.4: உடுமலை அருகே தென்னை நார் தொழிற்சாலையில்  தீ விபத்து ஏற்பட்டது. இதில் தென்னை நார்கள்  மற்றும் இயந்திரங்கள் சேதம் அடைந்தன. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள ஆண்டிய கவுண்டனூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் கந்தசாமி என்பவர் தென்னை நார் தொழிற்சாலை நடத்தி வருகிறார். நேற்று காலை தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்த நிலையில்,  உடுமலை தீயணைப்பு படை நிலைய அலுவலர் ஹரிராம கிருஷ்ணன் தலைமையில் விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் தென்னை நார் தொழிற்சாலையில் கொளுந்து விட்டு எரிந்த கொண்டிருந்த தீயை மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். இருப்பினும் தொடர்ந்து தென்னை நாரில் இருந்து வெளியேறிய புகை மூட்டத்தால் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். இதையடுத்து சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படவிருந்த பல லட்சம் மதிப்பிலான தென்னை நார்கள்  மற்றும் தொழிற்சாலையில் உள்ள இயந்திரங்கள் முற்றிலும் எரிந்து சேதம் ஆனது. தீவிபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: