உலக வனவிலங்கு தினம் அனுசரிப்பு

ஊட்டி, மார்ச் 4: ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் நேற்று உலக வனவிலங்கு தினம் அனுசரிக்கப்பட்டது. விலங்கியல் துறை துணைப் பேராசிரியர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். விலங்கியல் துறை தலைவர் எபினேசர் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி கலந்துகொண்டு வனவிலங்குகள் குறித்தும், அவைகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசினார். நீலகிரி வனக்கோட்ட உதவி வனப் பாதுகாவலர் சரவணகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகையில், இந்தியாவிலேயே முதலாவதாக தோற்றுவிக்கப்பட்ட உயிர்ச் சூழல் மண்டலம் நீலகிரி உயிர்ச் சூழல் மண்டலம் ஆகும். அதேபோல் யுனஸ்கோ அந்தஸ்து பெற்றதும் நீலகிரி உயிர்ச் சூழல் மண்டலம் ஆகும்.

இதனை நாம் பாதுகாக்க வேண்டும். இங்கு வாழும் பல அரிய வகை உயிரினங்கள், தாவரங்களை பாதுகாத்திட வேண்டும். மேலும், நாம் இந்த உயிர்ச்சூழல் மண்டலத்தில் வாழ்ந்து வருகிறோம் என்பதை பெருமை கொள்ள வேண்டும். வனவிலங்குகளை துன்புறுத்தக்கூடாது. வனங்களையும் வனவிலங்குகளையும் பாதுகாத்திட வேண்டும் என்றார். பன்னாட்டு வனவிலங்கு நிதியத்தின் ஆலோசகர் மோகன்ராஜ் கலந்துகொண்டு நீலகிரி மாவட்டத்தில் வாழும் வனவிலங்குகள், அவைகளை பாதுகாத்திட நாம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்.

Related Stories: