கூடலூர் இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு விழா

கூடலூர், மார்ச் 4: கூடலூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த இன்ஸ்பெக்டர்  சிவக்குமார் கூடலூரில் இருந்து ஈரோட்டிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்  அவருக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் நீலகிரி மேற்கு மாவட்ட செயலாளர் தமீமுன் அன்சாரி, நகர செயலாளர் ஜீவா ஆகியோர் பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு வழங்கினர்.  துணைச் செயலாளர் ஜோசப், நிசார் பாபு, எம் ரபீக் மாவட்ட பொருளாளர் ரபீக், நகர பொருளாளர் அப்துல் மஜீத் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories:

>