ஆட்டோவில் ஏற சொல்லி அத்துமீறிய டிரைவர் கைது

கோவை, மார்ச்.4: கோவை வேலாண்டிபாளையம் குப்ப கோணார் தெருவை சேர்ந்த 40 வயது பெண் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் வேலை முடிந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். தடாகம் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை அருகே சென்றபோது அந்த வழியாக ஆட்டோவில் வந்த நபர் அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக கையை பிடித்து இழுத்து ஆட்டோவில் ஏறுமாறு கட்டாயப்படுத்தியுள்ளார். அப்போது ஆட்டோ டிரைவர் குடிபோதையில் இருந்துள்ளார். இதனால் பயந்துபோன அந்த பெண் இது தொடர்பாக சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தார்.

விசாரணையில், பெண்ணிடம்  கையைப் பிடித்து அத்துமீறியது இடையர்பாளையம் ராமலட்சுமி நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஆண்டியப்பன் (47) என்பது தெரியவந்தது. போலீசார் அவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Related Stories:

>