3 நாட்களாக குளிர் காற்று வீசுவதால் மக்கள் கடும் அவதி

ஊட்டி, மார்ச் 4: ஊட்டியில் மூன்று நாட்களுக்கு மேலாக காற்று வீசி வருவதால் பொதுமக்கள் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். ஊட்டியில் மார்ச் மாதம் துவங்கினாலேயே வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக காணப்படும். பனிப்பொழிவு படிப்படியாக குறைந்துவிடும். காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு பொதுமக்கள் சகஜ நிலைமைக்கு திரும்புவது வழக்கம். மேலும், வெயிலின் தாக்கம் அதிகரிக்க அதிகரிக்க 9 மாதங்களாக மழை மற்றும் பனியால் உடலில் போட்டுக்கொள்ளும் வெம்மை ஆடைகளை களைந்து விட்டு, சமவெளி போன்று சாதாரண உடைகளுக்கு மாறுவது வழக்கம்.

அதேபோல் கடந்த ஒரு வாரமாக நீலகிரி மாவட்டத்தில் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. அதே சமயம் ஊட்டியில் மட்டும் காற்று வீசி வருகிறது. இதனால் பல இடங்களில் குளிர் அதிகமாக காணப்படுகிறது. மேலும் காற்றின் காரணமாக முகம், கை, கால்களில் வெடிப்பு ஏற்பட்டும், தலைவலி மற்றும் காய்ச்சலால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

Related Stories:

>