மஞ்சூர் பகுதிகளில் கட்சி கொடிக்கம்பம் சுவரொட்டிகள் அகற்றம்

மஞ்சூர், மார்ச் 4: மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் அரசியல் கட்சி கொடிக்கம்பங்கள், பேனர்கள், சுவரொட்டிகள் அகற்றப்பட்டன. தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுவதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதனைதொடர்ந்து மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டன.

மேலும் பல்வேறு இடங்களில் அகற்றாமல் இருந்த கொடி கம்பங்கள், சுவரொட்டிகள், பேனர்களை குந்தா வருவாய்துறை மற்றும் கீழ்குந்தா பேரூராட்சி செயல் அலுவலர் ரவிக்குமார் முன்னிலையில் ஊழியர்கள் மூலம் அகற்றினார்கள். இதேபோல் சாலையோரங்களில் நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமான தடுப்பு சுவர்களில் இருந்த கட்சி விளம்பரங்கள், வாசகங்கள் அழிக்கப்பட்டது.

Related Stories:

>