குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

பந்தலூர், மார்ச் 4: பந்தலூர் அருகே பழைய நெல்லியாளம் பகுதியில் இருந்து நெல்லியாளம் டேன் டீ மற்றும் கொளப்பள்ளி பகுதிக்கு செல்லும் 1 கி.மீ. தூரமுள்ள தார்சாலை பழுதாகி குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் சாலையை பயன்படுத்த முடியாமல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். அவசர தேவைகளுக்காக ஆம்புலன்ஸ், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் சென்று வர முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.

பழுதடைந்த தார்சாலையை சீரமைக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் நெல்லியாளம் நகராட்சிக்கு பல்வேறு புகார்கள் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பழுதடைந்த சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Related Stories:

>