கொரோனா பாதிப்பால் கேரள மாநில சுற்றுலா பயணிகள் வருகை குறைவு

ஊட்டி, மார்ச் 4: கேரளா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் அங்கிருந்து ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்தே காணப்படுகிறது. நீலகிரி மாவட்டத்திற்கு அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து நாள்தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதில் கேரள மாநில சுற்றுலா பயணிகளை அதிகம் காண முடியும்.தற்போது கேரள மாநிலத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்த முடிவுகளை எடுத்து வர வேண்டும் என நீலகிரி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், கடந்த ஒரு வாரமாக கேரள மாநிலத்தில் இருந்து ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. இதனால், ஊட்டி தாவரவியல் பூங்கா உட்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் மிகவும் குறைந்து காணப்படுகிறது.

Related Stories:

>