வாலிபர் தற்கொலை

கோவை, மார்ச்.4: கிருஷ்ணகிரி போச்சம்பள்ளியை சேர்ந்தவர் சுப்ரமணி மகன் மூர்த்தி (20). இவர் கோவை அடுத்த ஆலாந்துறை முட்டத்து வயல் பகுதியில் தங்கியிருந்து குடும்பத்துடன் கூலி வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில், மூர்த்தி இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அவரிடம் நீண்ட நேரமாக செல்போனில் பேசி வந்துள்ளார். இதனால் அவர் கவனம் சிதறி ஒழுங்காக வேலைக்கு செல்லவில்லை என தெரிகிறது. இதனை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் அவர் சில நாட்களாக கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து மயங்கினார்.

அவரை குடும்பத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.  கோவை அடுத்த துடியலூர் சரவணாநகரை சேர்ந்தவர் ரகுநாத் (35). இவர் தனியார் நிறுவனத்தில் ஒப்பந்ததாரராக இருந்தார். சமீப காலமாக போதிய வருமானம் இல்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். குடும்பம் நடத்த முடியாமல் சிரமப்பட்டு உள்ளார். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories:

>