வந்தவாசி அருகே மீன் வியாபாரியிடம் ₹91 ஆயிரம் பறிமுதல்

வந்தவாசி, மார்ச் 4: வந்தவாசி அடுத்த நடுக்குப்பம் கிராமத்தில் மீன் வியாபாரியிடம் உரிய ஆவணம் இல்லாதால் ₹91 ஆயிரத்தை தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.

வந்தவாசி அடுத்த நடுக்குப்பம் கிராமத்தில் நேற்று தாசில்தார் அற்புதம் தலைமையிலான தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்திற்கு சென்ற சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மீன் வியாபாரி சண்முகம் என்பவரிடம் உரிய ஆவணம் இல்லாமல் ₹91 ஆயிரம் ரொக்கம் இருப்பது தெரியவந்தது. அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து தாசில்தார் திருநாவுக்கரசிடம் ஒப்படைத்தனர்.

Related Stories:

>