தமிழக தேர்தல் அதிகாரியிடம் கார்த்திக் எம்.எல்.ஏ. புகார் மனு

கோவை, மார்ச் 4: கோவை மாநகர் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கார்த்திக் எம்.எல்.ஏ. தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலருக்கு அனுப்பியுள்ள புகார் மனு: கோவை மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில், உதவி ஆணையாளராக பொறுப்பில் இருக்கும்  ரவி, கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ச்சியாக இப்பதவியில் பணியாற்றி வருகிறார். இவர், ஓய்வுபெற்ற பின்னரும், 3-வது முறையாக பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. தற்போது, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னரும், இவர் பணியில் ெதாடர்கிறார்.

இவர், நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது ஆளும் அ.தி.மு.க.வினருக்கு ஆதரவாக பலவித முறைகேடுகள் ெசய்ய வாய்ப்புள்ளது. எனவே, இவரது பணி நீட்டிப்பு உத்தரவை, தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கார்த்திக் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

Related Stories:

>