அனுமதி இல்லாமல் மண் எடுத்து சென்ற லாரி பறிமுதல்

பெ.நா.பாளையம், மார்ச் 4: கோவை அருகே அனுமதி இல்லாமல் மண் எடுத்து சென்ற லாரி பறிமுதல் செய்யப்பட்டது. கோவை சின்னத்தடாகம் அடுத்த தண்ணீர் பந்தல் அருகே வருவாய்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மண் பாரம் ஏற்றி வந்த டிப்பர் லாரியை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது, அனுமதி இல்லாமல் லாரியில் மண் எடுத்து சென்றது தெரியவந்தது. வருவாய் ஆய்வாளர் ரமேஷ் லாரியை பறிமுதல் செய்து தடாகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். லாரி டிரைவர் சிவகுமாரிடம் போலீசார் விசாரணை நடந்து வருகிறது.

Related Stories:

>