44 பேருக்கு கொரோனா

கோவை, மார்ச் 4: கோவை மாவட்டத்தில் புதியதாக 44 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்து 883 ஆக உயர்ந்தது. நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு சிகிச்சைப்பெற்று வந்த 44 பேர் முழுமையாக குணமடைந்த நிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

இதனால், மாவட்டத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்த நபர்களின் எண்ணிக்கை 54 ஆயிரத்து 820 ஆக உள்ளது. தற்போது, கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ., தனியார் மருத்துவமனை மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் மொத்தம் 380  பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். கொரோனா காரணமாக கோவையில் நேற்று யாரும் உயிரிழக்கவில்லை. இதனால், மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 683-ஆக உள்ளது.

Related Stories:

>