சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு புதிய ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் பெறுவது நிறுத்தி வைப்பு

வேலூர், மார்ச் 4: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு புதிதாக ரேஷன் கார்டுக்காக விண்ணப்பங்கள் பெறுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பொது வினியோகத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு கடந்த வாரம் வெளியானது. அதன்படி, தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம்தேதி ஒரே கட்டமாக நடத்தப்படுகிறது. இந்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக செயல்பாட்டுக்கு வந்தது. இதனால் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவது, நலத்திட்ட உதவிகளுக்கான விண்ணப்பங்கள் பெறுவது என அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதேபோல் ஒவ்வொரு திங்கட்கிழமையும் கலெக்டர் அலுவலகங்களில் நடத்தப்படும் மக்கள் குறைதீர்வு கூட்டங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. புதிதாக ரேஷன் கார்டு கேட்டு வரும் விண்ணப்பங்கள் மீதான நடவடிக்கையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், விண்ணப்பங்கள் பெறுவதும் நிறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் நடைமுறைகள் முடிந்ததும், முறையான அறிவிப்பு வெளியாகும். அப்போது புதிய ரேஷன் கார்டு வேண்டுவோர் விண்ணப்பிக்கலாம் என்று பொது வினியோகத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

>