வேளாண் பல்கலை. தாவரவியல் பூங்கா செல்ல பொதுமக்களுக்கு அனுமதி

கோவை, மார்ச் 4: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தாவரவியல் பூங்கா சீரமைப்பு பணிகள் முடிந்து பொதுமக்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், நுழைவு கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் தாவரவியல் பூங்கா 1908-ல் துவங்கப்பட்டது. 113 வருடங்கள் பழமையான பூங்காக, ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு அடுத்து இரண்டாவது பெரிய பூங்கா ஆகும். பூங்கா 47.7 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில், 70 இயற்கை பெருங்குடும்பங்களை சேர்ந்த 800 சிற்றினங்களும், பலரகமான செடிகளும், 400 சிற்றினங்களை சேர்ந்த தனித்துவமான அலங்கார செடிவகைகள், மூலிகை ேதாட்டம் ஆகியவை அமைந்துள்ளது.

சமீபத்தில் தாவரவியல் பூங்கா சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, சுமார் 4.5 ேகாடி மதிப்பில் பூங்கா புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இரண்டு அடுக்கு தோட்டம் என அழைக்கப்படும் முகப்பு பகுதியிலுள்ள முறைசார் தோட்டத்தை வலுவூட்டுதல், முதன்மை பாதையின் இரு பக்கங்களிலும் புல்தரைகள் நடுதல், சமச்சீராக பூக்கும் புதர்ச்செடிகளை நடுதல், அலங்கார நீர்வீழ்ச்சி அமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தவிர, மூழ்கு தோட்டம், பாறைத்தோட்டம், ஜப்பானிய தோட்டம் ஆகியவை சீரமைக்கப்பட்டுள்ளது. புதியதாக அமைக்கப்பட்டுள்ள மூலிகை தோட்டம், நறுமண தோட்டம் ஆகியவற்றில் மருத்துவ செடிகள் மற்றும் நறுமண செடிகள் நடப்பட்டுள்ளது.  

குழந்தைகள் பூங்கா புதிய விளையாட்டு உபகரணங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. தவிர, பயிர்பெருக்கம், நாற்றங்கால் செடிகள் உற்பத்தி, விற்பனைக்கான உட்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. பாரம்பரிய முக்கியத்துவம் வாய்ந்த தாமரை மற்றும் அல்லி தொகுப்புகள், சூரிய ஒளி விளக்குகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தவிர, பொதுமக்கள், மாணவர்கள் பயன்பெறும் வகையில் தாவரங்கள் குறித்த அறிவியல் ரீதியான தகவல்களை பெற கீயூஆர் குறியீடுகள் அமைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர், புதிய ஓய்வு அறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அனைத்து பணிகளும் நிறைவு பெற்றத்தை அடுத்து தற்போது பூங்காவிற்குள் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரையும் பூங்கா செயல்படும். கடந்த காலங்களில் பூங்காவிற்கு நுழைவு கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.20, சிறியவர்களுக்கு ரூ.10 வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது புதுப்பிக்கப்பட்ட பூங்கா கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.50, சிறியவர்களுக்கு ரூ.30 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பல ேகாடி செலவு செய்து பூங்கா சீரமைக்கப்பட்டுள்ளதால் நுழைவு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தினர் தெரிவித்தனர். இந்த நுழைவு கட்டணமானது ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு நிகரான கட்டணமாகும். இருப்பினும், அங்குள்ளதைபோல் இங்கும் ஏராளமான புதிய வகை செடிகள், பூக்கள், மரங்கள், நறுமண செடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: