×

மாவட்டத்தில் பொதுக்கூட்டம் நடத்தும் இடங்கள் அதிகரிப்பு

ஈரோடு, மார்ச் 4:  ஈரோடு மாவட்டத்தில் அரசியல் கட்சியினர் பொதுக்கூட்டங்கள் நடத்தும் இடங்கள் 83 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலையொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் அரசியல் கட்சியினர் பொதுக்கூட்டங்கள் நடத்திட தொகுதி வாரியாக இடங்கள் தேர்வு செய்து மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. முதலில் மாவட்டம் முழுவதும் 65 இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்திட அனுமதி வழங்கிய நிலையில், தற்போது கூடுதல் இடங்களை தேர்வு செய்து அறிவித்துள்ளது. அதன்படி, மாவட்டம் முழுவதும் 83 இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்திக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் 6 இடங்கள், ஈரோடு மேற்கு தொகுதியில் 16 இடங்கள், பவானி 12, அந்தியூர் 13, கோபி 16, பெருந்துறை 6, பவானிசாகர் 4, மொடக்குறிச்சி 10 இடங்கள் என மொத்தம் மாவட்டம் முழுவதும் 83 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு போலீசில் விண்ணப்பிக்கும் போது தேர்வு செய்யப்பட்டுள்ள 83 இடங்களுக்கு அனுமதி கேட்டு மட்டுமே விண்ணபிக்க வேண்டும் என்று கலெக்டர் கதிரவன் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED ரயில்வே ஸ்டேஷனில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்