×

வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து விளக்கம்

கோபி, மார்ச் 4:  கோபி தாலுகா அலுவலகத்தில் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்பாடு குறித்த விளக்கம் அளிக்கப்பட்டது.தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான  அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக தேர்தலில் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. மின்னனு வாக்குப்பதிவு இயந்திரத்தின்  பயன்பாடு, அதை இயக்கும் முறை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கோபி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது

Tags :
× RELATED முககவசம் அணியாத 366 பேர் மீது வழக்கு