×

‘‘இந்துக்கள் ஓட்டு இந்துக்களுக்கே...’’ இந்து மக்கள் கட்சி அறிவிப்பால் கோயில் முன் போலீஸ் பாதுகாப்பு

ஈரோடு,  மார்ச் 4: ஈரோடு கோட்டை ஆருத்ரா கபாலீஸ்வரர் கோயிலில் இந்துக்களின்  ஓட்டு இந்துக்களுக்கே என உறுதிமொழி எடுப்பதாக இந்து மக்கள் கட்சியினர் அறிவித்திருந்தனர். இதனை அறிந்த ஈரோடு டவுன் போலீசார் அங்கு நேற்று பகல் முழுவதும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையில், கோயிலுக்கு  வந்த இந்து மக்கள் கட்சியினர் போலீசாரை பார்த்து அதிர்ச்சி அடைந்து,

இயல்பாக கோயிலுக்குள் சென்று பொதுமக்களைபோல சுவாமியை தரிசனம் செய்து விட்டு, அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இருப்பினும், அக்கட்சியின்  மாவட்ட தலைவர் பிரகாஷ் கூறுகையில், ‘‘இந்து மக்கள் கட்சி சார்பில் 8 சட்டமன்ற தொகுதிகளிலும் தனித்து போட்டியிட உள்ளோம். அதற்காக இன்று (நேற்று) கோயிலில் உறுதி மொழி எடுத்துக்கொண்டோம்’’ என்றார்.

Tags : Hindus ,Hindu People's Party ,
× RELATED கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு...