×

துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டு பாதுகாப்பு மையத்தில் ஒப்படைப்பு

ஈரோடு, மார்ச் 4: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடக்க உள்ளது. இதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் தற்காப்பிற்காக துப்பாக்கி உரிமம் பெற்று துப்பாக்கி வைத்து இருப்பவர்கள் உடனடியாக அவற்றை அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் கதிரவன் தெரிவித்திருந்தார். இதன்பேரில், ஈரோடு மாவட்டத்தில் பிஸ்டல், ரைபிள், ஒற்றை மற்றும் இரட்டை குழல் என 1,447 துப்பாக்கிகள் உரிமம் பெற்று வைத்துள்ள உரிமையாளர்கள் துப்பாக்கிகளை போலீஸ் ஸ்டேஷன்களிலும், அதற்குரிய பாதுகாப்பு மையத்திலும் ஒப்படைத்தனர்.

இது குறித்து ஈரோடு எஸ்பி, தங்கதுரை கூறியதாவது: ‘ஈரோடு மாவட்டத்தில் 5 போலீஸ் சப்-டிவிசன்களில் உரிமம் பெற்று துப்பாக்கிகளை வைத்துள்ளவர்களிடம் 100சதவீதம் பெறப்பட்டு, பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதில் வங்கி பணம், நகை பாதுகாப்பிற்காக 58 துப்பாக்கிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிகள் பயன்பாட்டுக்கு வங்கி நிர்வாகங்கள் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளது, என்றார்.

Tags :
× RELATED அவிநாசிலிங்கேசுவரர் கோயில் திருவிழா; சுவாமி புறப்பாடு