பணம் எடுத்து செல்லும் போது வங்கியாளர்கள் உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்

ஈரோடு, மார்ச் 4:  ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து வங்கியாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கதிரவன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் அவர் கூறியதாவது: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் கால அட்டவணை அறிவிக்கப்பட்டு, ஈரோடு மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளது. எனவே, வங்கியாளர்கள் வங்கியிலிருந்து கிளைகளுக்கு பணங்களை எடுத்துச் செல்லும் போது, அந்த தொகைக்கான வங்கி ஆவணங்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். மேலும், பணம் எடுத்து செல்லும் வங்கி ஊழியர்கள் உரிய அடையாள அட்டையினை வைத்திருக்க வேண்டும்.

சந்தேகப்படும்படியான பண பரிமாற்றங்களை உடனடியாக வங்கியின் தலைமை இடத்திற்கு தெரிவித்து தேர்தல் அலுவலர்களுக்கு தெரிவிக்க வேண்டும். ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் நிரப்ப எடுத்து செல்லும் ஏஜென்டுகள் உரிய ஆவணங்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். மேலும், ரூ.10 லட்சத்திற்கு மேல் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கும்போது, வங்கியின் தலைமை அலுவலகத்துக்கு தெரிவித்து வருமானவரி துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகளை அனைத்து வங்கியாளர்களும் தவறாமல், பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இக்கூட்டத்தில், முன்னோடி வங்கி மேலாளர் அரவிந்தன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) ஈஸ்வரன் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள், அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். மாவட்டத்தில் 100சதவீதம்

Related Stories: