தேர்தல் நடத்தை விதிமீறல் மநீம, நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது வழக்கு

திருவெறும்பூர், மார்ச் 4: திருவெறும்பூர் பகுதியில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி சுவர் விளம்பரம் செய்ததாக மநீம, நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நடைமுறை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. அதனைத்தொடர்ந்து சுவர் விளம்பரங்கள், கொடிக்கம்பங்கள், பிளக்ஸ்கள் அகற்றப்பட்டு வருகின்றன. மேலும் தேர்தல் அதிகாரிகள் வாகன சோதனைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் ரயில்வே மேம்பாலத்தில் மக்கள் நீதி மையம் சார்பில் விளம்பரம் செய்திருந்த மன்ற நிர்வாகி ஹைதர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேபோல் நவல்பட்டு பெல் நிறுவன மதில் சுவரில் நாம் தமிழர் கட்சியினர் விளம்பரம் செய்திருந்தனர். இது சம்பந்தமாக ஒன்றிய நிர்வாகி விக்டர் என்பவர் மீது நவல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories:

>