மணப்பாறையில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு

மணப்பாறை, மார்ச் 4: மணப்பாறையில் துணை ராணுவ படையினரின் பாதுகாப்பு அணிவகுப்பு நேற்று நடந்தது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையொட்டி மணப்பாறையில் நடந்த துணை ராணுவ படையினரின் பாதுகாப்பு அணிவகுப்பை திருச்சி மாவட்ட எஸ்பி ராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து மதுரை ரோட்டில் துவங்கிய இந்த அணிவகுப்பு பஸ் ஸ்டாண்ட், மாரியம்மன் கோயில் வீதி, கோவில்பட்டி ரோடு மற்றும் முக்கிய வீதிகள் வழியாக சென்றது.

Related Stories:

>