மது பதுக்கி விற்ற 4 பேர் கைது

தா.பேட்டை, மார்ச் 4: தா.பேட்டை பகுதியில் கள்ள சந்தையில் மது விற்பதாக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மதுவிலக்கு டிஎஸ்பி கோகுலசந்திரன் உத்தரவின் பேரில் எஸ்ஐ சிவராமன் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தா.பேட்டை அருகே மகாதேவி கிராமத்தில் ஆறுமுகம்(60), ஊரக்கரை கிராமத்தில் செல்லதுரை(52), கோணப்பம்பட்டி பகுதியில் தியாகு(32), பாப்பாபட்டி பகுதியில் செல்வகுமார்(38) ஆகியோர் கள்ளசந்தையில் மது விற்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து 4 பேரையும் கைது செய்தனர். 62 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories:

>