துறையூர் காவல்நிலையத்தில் வியாபாரிகள் சங்கத்தினர் போலீசார் ஆலோசனை

துறையூர், மார்ச் 4: துறையூர் காவல் நிலையத்தில் அனைத்து வியாபாரிகள் சங்கத்தினருக்கு தேர்தலை முன்னிட்டு முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் துறையூர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் விதுன்குமார், மளிகைக் கடை, நகைக்கடை, அச்சகம், கேபிள் ஆபரேட்டர்கள் உள்ளிட்ட அனைத்து வியாபாரிகள் சங்கத்தினருக்கு சில முக்கிய தேர்தல் கால ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்கினார். சில கட்சியினர் பரிசுப் பொருட்களை வழங்குவதற்கு மளிகை கடைகளில் டோக்கன் மூலம் மளிகை பொருட்கள் விநியோகிக்க கூடாது.

அதுபோல் நகை அடகு கடைகளில் 2,000 முதல் 3,000 வரை அதிக நபர்களுக்கு நகைகள் அடகு வாங்கபட்டால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். கேபிள் ஆபரேட்டர்கள் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்கு புறம்பாக செயல்படக்கூடாது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு கருத்துக்களை துறையூர் இன்ஸ்பெக்டர் அனைத்து வியாபாரிகள் சங்க உறுப்பினர்களுக்கு தெரிவித்தார். இக்கூட்டத்தில் அனைத்து வியாபாரிகளும் கலந்துகொண்டனர்.

Related Stories:

>